Home தமிழகம் அந்த தவறை மீண்டும் செய்த மனைவி: கம்பியால் அடித்து கொலை செய்த கணவன்; பகீர் வாக்குமூலம்!

அந்த தவறை மீண்டும் செய்த மனைவி: கம்பியால் அடித்து கொலை செய்த கணவன்; பகீர் வாக்குமூலம்!

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கம்பியால் அடித்துக் கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கம்பியால் அடித்துக் கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விமலா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.

ஆட்டோ ஓட்டுநராக பணிசெய்து வரும்  மாரிமுத்து அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி திங்கட்கிழமை கிரக பிரவேசம் நடத்தியுள்ளார்.  இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலையில், பழைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் விமலா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கு முன்பாகவே  கணவன் மாரிமுத்து, தனது மனைவியை தான்தான் கொலை செய்ததாக கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் சரணடைந்தார். 

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘கிரகப் பிரவேசம் முடித்து கணவன், மனைவி, குழந்தை 3 பேரும் புதிய வீட்டில் திங்கட்கிழமை இரவு தங்கியுள்ளனர். அதிகாலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டு மாரிமுத்து எழுந்து பார்த்தபோது மனைவி விமலாவைக் காணவில்லை. பழைய வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க சென்றிருப்பாரோ என்ற சந்தேகத்தில் மாரிமுத்து அங்கு சென்றுள்ளார். அங்கு, வெல்டிங் பட்டறையில் வேலை செய்யும் 20 வயதான குமார் என்பவருடன்  விமலா உல்லாசமாக இருப்பதைப் பார்த்து மாரிமுத்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆத்திரத்தில் அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து இருவரையும் தாக்கியுள்ளார். சிறிய காயங்களுடன் குமார் தப்பித்து ஓட,விமலாவின் பின்னந்தலையில் மாரிமுத்து இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தார். ரத்தவெள்ளத்தில் விழுந்த விமலா அங்கேயே உயிரிழந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன் விமலா தொடர்பில் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. காவல்நிலையம் வரை இந்த பிரச்னை சென்று போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். தற்போது மனைவி திருந்தி விட்டார் என்று நினைத்திருந்த தருணத்தில் விமலா மீண்டும் அதே தவறை செய்ததால் ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்து விட்டதாக மாரிமுத்து தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

விசில் பறக்கணும், தடி பிடிக்கணும், செல்பி எடுக்கணும்- ராஜேந்திர பாலாஜி அதிரடி

விருதுநகரில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார், நிகழ்ச்சியில்...

“கேட்காமலே கொடுக்கிற அரசுதான் எடப்பாடி அரசு! திமுகவுக்கு ஆப்பு இருக்கு”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் அதிமுக கட்சியின் ஈரோடு புறநகா் மாவட்ட மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- கூலி தொழிலாளி உயிரிழப்பு

தேனி போடிநாயக்கனூர் அருகே ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழந்தார். கேரள மாநிலம் மூணாறை...

மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு!

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசு நாடாக அறிவித்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் ஆண்டு தொடங்கிய குடியரசுப்பயணம் 72ஆவது ஆண்டை எட்டியுள்ளது....
Do NOT follow this link or you will be banned from the site!