“அத பத்தி அப்புறம் பேசலாம்”…கதம்…கதம்…; நடிகர் ரஜினிகாந்த்

பேட்ட திரைப்பட கொண்டாட்டத்திற்கு இடையே, அரசியல் தலைவராக எப்போது மாறுவீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி விளக்கமளித்துள்ளார்

சென்னை: பேட்ட திரைப்பட கொண்டாட்டத்திற்கு இடையே, அரசியல் தலைவராக எப்போது மாறுவீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி விளக்கமளித்துள்ளார்.

சன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என திருவிழா போல் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வசனத்தில் தொடங்கும் பேட்ட படத்தில் “ஒரு நல்லாட்சி எப்படி இருக்குமோ அப்படி தான் இனிமே இந்த ஹாஸ்டல் இருக்கும். புதுசா வருபவர்களை தொறத்துற அரசியல் இங்கு இருந்து தான் தொடங்குது. நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் கிடையாது. எதிரியை சூழ்ச்சி பண்ணி வீழ்த்துறது தப்பே இல்ல” உள்ளிட்ட படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் ரஜினி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், தனது போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்த பெருமைகள் அனைத்தும் இயக்குனர் கார்திக் சுப்புராஜை சேரும் என கூறிய ரஜினி, ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது நடிகனின் கடமை என்றும் தெரிவித்தார்.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த ரஜினியிடம், கபாலி, காலா, பேட்ட என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறீர்கள். நடிகர் ரஜினி எப்போது தலைவர் ஆவார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, “அத பத்தி அப்புறம் பேசலாம்” என கூறி விட்டு சென்றார்.

Most Popular

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதன்படி கேரள மாநிலம் இடுக்கி...

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...

வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம்...