Home ஆன்மிகம் அத்தி வரதரின் அதிசயங்கள்... தரிசிக்கப் போனால் இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க?*

அத்தி வரதரின் அதிசயங்கள்… தரிசிக்கப் போனால் இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க?*

உலகம் முழுவதும் ஆன்மிக அன்பர்கள் நம் காஞ்சி மாநகரை நோக்கி அத்தி வரதரை தரிசிக்க வருகிறார்கள். அத்தி வரதனின் அதிசயங்கள் கணக்கிலடங்காதது. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்த சரஸ் திருக்குளத்தில் இருக்கும் அத்திவரதரை உருவாக்கியது பிரம்மன். 40 வருடங்களுக்கு ஒருமுறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம்.

உலகம் முழுவதும் ஆன்மிக அன்பர்கள் நம் காஞ்சி மாநகரை நோக்கி அத்தி வரதரை தரிசிக்க வருகிறார்கள். அத்தி வரதனின் அதிசயங்கள் கணக்கிலடங்காதது. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்த சரஸ் திருக்குளத்தில் இருக்கும் அத்திவரதரை உருவாக்கியது பிரம்மன். 40 வருடங்களுக்கு ஒருமுறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம்.

athivarathar

இந்த தலத்தில், இன்று கம்பீரமாக வீற்றிருக்கும் வரதராஜ பெருமாளை மூலவராக சொன்னாலும், உண்மையில் இவர் பழைய சீவிரம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தேவராஜ பெருமாள் என்கின்றன நம் புராணங்கள். ஆராய்ச்சியாளர்களும் அதை ஆமோதிக்கிறார்கள். 
இப்போது கோடிக்கணக்கானவர்களை தன்பால் ஈர்க்கும் காஞ்சி நகர் தான் திருவரங்கம், திருப்பதிக்கு எல்லாம் முந்தைய புராண சிறப்புகளை கொண்டது. சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில், பிரம்மனுக்கும் தேவர்களுக்கும் சங்கு, சக்கரம், கதை தாங்கிய புண்ணியகோடி கோலத்தில் பெருமாள் காட்சி அளித்தார். அப்படி புண்ணியகோடி கோலத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை பிரம்மன், அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார். 

athivarathar

பிரம்மன் வழிபட்ட அத்தி வரதரை ஏன் குளத்தில் நீருக்குள் ஒளித்து வைக்க வேண்டும்? இங்கு தான் வரதனின் விளையாட்டு ஆரம்பமானது. நிலை கொண்ட மனது பெருமாளைத் தவிர எல்லோருக்கும் கிடைத்து விடுமா என்ன? பிரம்மன் அத்தி மரத்தால் ஆன வரதராஜ பெருமாளை முன் நிறுத்தி மீண்டும் ஒரு யாகத்தை துவங்கினான். அப்போது யாகத்தின் நெருப்பு பெருமாள் சிலையை பாதித்தது. இதனால் செய்வதறியாமல் தவித்த பிரம்மன், தன் தவறை உணர்ந்து, என்ன செய்வது என பெருமாளை வேண்டி நின்றான். பெருமாள் அசரீரியாய், ‘பின்னமான திருமேனியை வெள்ளிப் பேழையில் வைத்து, அனந்தசரஸில் அமிழ்த்தி வையுங்கள்! என்றாராம். வரதனின் கட்டளையின் படி 40 ஆண்டுகளுக்கு வரதரை வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள். 
திருப்பதியில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் வெங்கடாஜலபதி. ஸ்ரீரங்கத்தில் சயனக்கோலத்தில், வருகிறவர்களை ஆசிர்வதிக்கிறார் அரங்கன். காஞ்சியில், நீரிலிருந்து மேலெழுந்து வருகிற வரதன் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். பிரம்மனால் உருவாக்கப்பட்ட இந்த அத்தி வரதரை தரிசிப்பவர்கள் மோட்சத்தைப் பெறலாம் என்பதால் உலகம் முழுவதில் இருந்தும் கூட்டம் அலைமோதுகிறது. 

athivarathar

நீருக்குள் இருக்கும் வரதரைப் பற்றி இன்னும் இன்னும் என வாய்வலிக்கச் சொல்கிறார்கள். அந்த வரதனைப் போலவே நீரை இறைக்க இறைக்க அதிசயங்கள் பல வெளியே வருகின்றன. 
அத்தி மரத்தினால் ஆனவர் அத்திவரதர். நீருள் மூழ்கியிருந்தால் அத்தி மரத்தின் வலு மேலும் அதிகரிக்கும் என்பதால் இப்படிச் செய்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆதியில், இந்த தலத்தில் மூலவராக வீற்றிருந்தவர் அத்திவரதரே என்றும், வீற்றிருந்த அத்திவரதரின் சிலை சேதமடைந்து விட்டதால், மேலும் பாதிப்படையாமல் இருக்க, அவரை நீருக்குள் வைத்தனர் என்றும் கூறுகிறார்கள். கோயிலைப் புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்யும்போது, மூலவரின் சக்தியை அத்திமர விக்ரஹத்தில் ஆவாஹனம் செய்து கருவறையில் வைத்துவிட்டு, மூலவரை நகர்த்தி வைப்பது இன்று வரையில் தொடரும் மரபு தானே? அதே போல, கும்பாபிஷேகத்தின் போது அத்திமர விக்ரஹத்தை எடுத்துவிட்டு, மூலவரைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மூலவராக இருந்த அத்திமரத் திருமேனியே, பெருமாளின் உத்தரவின்படி, திருக்குளத்தில் நீருக்கடியில் வைக்கப்பட்டுள்ளது! என்றும் கூறுகின்றனர்.

temple

எது எப்படியிருந்தால் தான் என்ன? வரதனை நினைத்தாலே முக்தி கிடைக்கும். பக்தர்கள் மனமுருகி கேட்கும் வரங்களை எல்லாம் இல்லையென்று சொல்லாமல் அள்ளிக் கொடுப்பவன் வரதன். கிளைக் கதைகளை எல்லாம் ஒதுக்கி தள்ளி விடுங்கள்! நீங்கள் அறிவியலை பேசும் இந்த தலைமுறை ஸ்மார்ட் போன் பக்தர்கள். உங்களது கேலிப் பேச்சுக்களுக்கும் கிண்டல்களுக்கும் எல்லாம் மீறி அத்தி வரதனை தரிசிக்க இன்னுமொரு வலுவான காரணம் இருக்கிறது.
ராமானுஜர், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வார் என்று வாழ்ந்த பெரியோர்கள் தரிசித்த, வழிபட்ட, பூஜைகள் செய்த வரதர் இவர் என்பது நிஜம் தான்… வரலாறு தான். அவர்கள் எல்லாம் வழிவழியாக வழிப்பட்ட அத்திவரதரை நேரில் தரிசிப்பதே வாழ்வின் பெரும் பேறு!
இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக இன்றும் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது அரச மரம்.  கீதையில் கிருஷ்ணன் தனது வடிவமாக குறிப்பிட்ட அரச மரமாக இந்த அரச மரத்தைத் தான் கருதுகிறார்கள். இந்த மரத்தின் எதிரில் தான் கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியை திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசையன்று சுற்றி வந்தால் குழந்தையில்லாத தம்பதியர்க்கு குழந்தைச் செல்வம் கிடைப்பது உறுதி என்பது ஐதீகம். 
ராமானுஜருக்காக கூரத்தாழ்வார் கண் பார்வை இழந்தது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அப்படி பார்வையை இழந்த கூரத்தாழ்வாருக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்தது இதே காஞ்சி வரதராஜ பெருமாள் ஆலயத்தில் தான். எனவே இங்கு கண் தொடர்பான பிரச்சினைகளுக்கும் வேண்டி பலன் பெற்று செல்கிறார்கள் பக்தர்கள். 

athivarathar

மூலவரை தரிசனம் செய்ய கீழே இருந்து 24 படிகளை ஏறி செல்ல வேண்டும். இந்த 24 படிகளும் காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை குறிக்கின்றன. எனவே மூலவரை தரிசிக்கச் செல்லும் போது, இந்தப் படிகளை ஒவ்வொரு படியாக ஏறும் போதும் பெருமாளை நினைத்தபடியே செல்ல வேண்டும்.
சிருங்கி பேரர் எனும் முனிவரின் மகன்கள் கெளதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். ஒருநாள் அவர்கள் பூஜைக்கு கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்தன. இதை கண்ட முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்து விட்டார். தவறை உணர்ந்து சிஷ்யர்கள் இறைஞ்சுக் கேட்டுக் கொண்டதால், ‘உங்களுக்கு காஞ்சி மாநகர் சென்றால் மன்னிப்பு உண்டு’ என்று தெரிவித்தார். அதன்படி இருவரும் சப்த புரிகளையும் சுற்றி வந்து வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர். பெருமாள் அவர்களுக்கு வழிகாட்டினார். கேட்கும் வரங்களை எல்லாம் தருபவர் தானே அவர். அதோடு உங்களது சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்கும். என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி நலம் உண்டாகும். சூரியன், சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.  இந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் வரதராஜபெருமாள் ஆலயத்தின் கருவறையின் பின்னால் மேற்கூரையில் இரு பல்லிகள் சிலையாய் இருக்கின்றன. தங்கம் மற்றும் வெள்ளியிலான கவசங்களை அவற்றிற்கு அமைத்துள்ளனர். வரதனை தரிசிக்கும் பக்தர்கள் பொறுமையாய் வரிசையில் நின்று அந்த பல்லிகளை தொட்டு தடவி வணங்குகிறார்கள். இதன் மூலம் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்துக் கொள்கிறார்கள்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews