அத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை!

நாற்பது ஆண்டுகள் ஜலவாசத்திற்குப் பிறகு காட்சியருள எழுந்திருக்கும் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23ஆம் தேதி காஞ்சீபுரம் வருகிறார். முதல்நாள் அத்திவரதரை தரிசனம் செய்யும் மோடி, காஞ்சீபுரத்திலேயே தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்ய உள்ளார்.

நாற்பது ஆண்டுகள் ஜலவாசத்திற்குப் பிறகு காட்சியருள எழுந்திருக்கும் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23ஆம் தேதி காஞ்சீபுரம் வருகிறார். முதல்நாள் அத்திவரதரை தரிசனம் செய்யும் மோடி, காஞ்சீபுரத்திலேயே தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்ய உள்ளார். மோடி வருகையையொட்டி காஞ்சீபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

Aththivaradhar

இதுநாள்வரை லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, வெளிமாநிலங்களிலிருந்தும் வந்து தரிசனம் பெற்றுள்ளனர். முன்னதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் தரிசனம் செய்தனர். பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து தமிழக அமைச்சர்களும் வருகை தர உள்ளனர். தரிசனத்திற்குப் பிறகு, 40 ஆண்டுகளுக்கு முன்னதாக அத்திவரதரை  தண்ணீருக்குள் போட்டது நேருவின் சதி என பிரதமர் சொல்லமாட்டார் என நம்புவோம்.
 

Most Popular

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

மேற்கு டெல்லியில் இரண்டு நாட்களுக்கு(ஆகஸ்ட்- 4) முன்பு 12 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் (டி.சி.டபிள்யூ) வியாழக்கிழமை டெல்லி போலீசாருக்கு...

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...