Home தமிழகம் அதிவேகமாக வந்த பைக் மோதி விபத்து..கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு!

அதிவேகமாக வந்த பைக் மோதி விபத்து..கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு!

அகிலாவின் ஆசையை நிறைவேற்ற கடுமையாக உழைத்து, மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்மணி என்பவரது மகள் அகிலா. டெய்லராக இருந்து வரும் தமிழ்மணி, மருத்துவராக வேண்டும் என்ற அகிலாவின் ஆசையை நிறைவேற்ற கடுமையாக உழைத்து, மருத்துவக் கல்லூரியில் சேர்த்துள்ளார். பெரும் கஷ்டங்களுக்கு இடையே 5 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்த அகிலா, கடந்த ஓராண்டு காலமாக பயிற்சி மருத்துவராக இருந்து வந்துள்ளார். அவரின் பயிற்சி காலம் கடந்த மார்ச் மாதம் முடிந்த நிலையில், கொரோனா தடுப்பு பணி காரணமாக அவரது பணி மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

ttn

இதனையடுத்து கடந்த வாரம் தனது பயிற்சி படிப்பின் சான்றிதழை பெற தனது நண்பர் பிரபஞ்சனுடன் பைக்கில் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். சான்றிதழ் பெற்றுக் கொண்டு திரும்பும் வழியில், எதிரே வேகமாக பைக்கை ஓட்டிக் கொண்டு வந்த கருப்பணன் அகிலா சென்ற பைக் மீது மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அகிலா மற்றும் பிரபஞ்சன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அகிலா இன்று உயிரிழந்துள்ளார்.  

பெரும் இன்னல்களுக்கிடையே மருத்துவ படிப்பை முடித்து, மருத்துவராக பணியாற்ற வேண்டும் என்ற கனவு நிறைவேறாமலே உயிரிழந்த அகிலாவின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகிலாவின் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் என அகிலாவின் நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மனசாட்சியின் படி 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை...

வானத்திலிருந்து தங்க மழை: அள்ளிச் சென்ற கிராமத்தினர்

குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையம் அருகே உள்ளது ‘தம்மஸ்’ என்ற கிராமம்.சுமார் 500 குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தங்கக் கட்டி மழை...

‘தேர்தல் பணி தீவிரம்’ மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார் கமல்ஹாசன்!

தேர்தல் பணிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் நவ.2, 3 தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி...

மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை – போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி ஓசூர் அருகே 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்கள், அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
Do NOT follow this link or you will be banned from the site!