அதிமுக முக்கியப்புள்ளிகளை ரகசியமாக சந்தித்த செந்தில் பாலாஜி… கண் சிவந்து கடுப்பான எடப்பாடி..!

அமைதியாக இருந்து பின்னணியில் ஆட்சி கவிழ்ப்புக்கான விஷயங்களை முடுக்கி விடும் திட்டத்தில் தான் ஸ்டாலின் அப்படி சொன்னதாகக் கூறப்படுகிறது. பாஜக பாதுகாத்து வரும் அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் அத்தனை எளிதாக கலைத்து விடுவாரா என்பது சந்தேகமே.

அதிமுக ஆட்சியை கவிழ்க்க தூண்டில் போட்டு தூண்டில் போட்டு துவண்டு விட்டது திமுக. விட்ட குறை தொட்ட குறையாக இனியும் விட்டு வைக்கக்கூடாது என மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு அஸ்திரத்தை எடுக்கத் தொடங்கி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். senthil balaji

எத்தனையோ முறை அஸ்திரத்தை வீசினாலும், கடந்த மாதம் ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன் ஓ.எம்.ஜி  நிறுவனத்தின் நிர்வாகி சுனிலும், செந்தில் பாலாஜியையும் களமிறக்கி விட்டு போனார்.  இப்போது வரை பல்ஸ் பார்த்த அவர்கள்  கடந்தவாரம்  ஸ்டாலின் வீட்டிலேயே கூடி ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி விவாதித்திருக்கிறார்கள்.eps

அத்தோடு மட்டுமல்ல  செந்தில் பாலாஜி கடந்த வாரம் சென்னையைச் சேர்ந்த சில அதிமுக புள்ளிகளையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதிமுகவில் இருக்கும் தனக்கு மிக நெருக்கமானவர்களை மீண்டும் செந்தில்பாலாஜி சந்தித்து பேசியிருக்கிறார். இந்தத் தகவல் எடப்பாடி காதுகளுக்கும் சென்றிருக்கிறது. சட்டமன்றம் வரும் 20 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் திமுக முதல்வர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை இந்தக் கூட்டத் தொடரிலேயே எடுத்துக் கொள்வது பற்றி சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும். சபாநாயகர் தனபால் அவ்வாறு உடனே எடுத்துக் கொள்வாரா என்பதும் கேள்விக்குறிதான்.senthil balaji

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிடுவதாக அறிவித்தார்  ஸ்டாலின். உண்மையில் அவர் அப்படிச் சொன்னால் அதிமுக அந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்துவிடும்.  அமைதியாக இருந்து பின்னணியில் ஆட்சி கவிழ்ப்புக்கான விஷயங்களை முடுக்கி விடும் திட்டத்தில் தான் ஸ்டாலின் அப்படி சொன்னதாகக் கூறப்படுகிறது. பாஜக பாதுகாத்து வரும் அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் அத்தனை எளிதாக கலைத்து விடுவாரா என்பது சந்தேகமே.   

Most Popular

“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன் தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .

ஒரு சிறுவன் தன்னுடைய தாயார் விளையாட பூனைக்குட்டி வாங்கி தராததால் தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் தந்தை வெளிநாட்டிலிருப்பதால் ஒரு தாயும் 15 வயது சிறுவனும்...

‘பண்டிகை காலங்களைப் போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதத்தை போலவே, இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்...

பதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு...

“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .

'கான் இன் 60 விநாடிகள்'என்ற ஹாலிவுட் படம் பார்த்து, அதே ஸ்டைலில் டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாக கூறி ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகளை திருடி விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புது தில்லியில்...
Do NOT follow this link or you will be banned from the site!