அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது : முக ஸ்டாலின் அறிக்கை..!

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டுமே 1613 கொலைகள் நடந்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற பேரவை இடைத்தேர்தலுக்காக வாக்கு சேகரித்தார். இது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ தனது ஆட்சிக்குக் கொலை போன்ற குற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் துளியும் இல்லை என்று உணர்வதோடு, சட்டமன்றத்திற்குத் தவறான தகவல்கள் தந்ததாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

MK Stalin

அந்த அறிக்கையில், முதல்வர் செய்த பச்சை பொய்ப் பிரச்சாரத்தின் ஈரம் காய்வதற்குள் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள  2017 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டுமே 1613 கொலைகள் நடந்துள்ளது. இந்தியாவில் அதிக கொலைகள் நடந்த பட்டியலில் தமிழகம் 6 ஆம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், 162 கொலைகளுடன் மாநகரங்கள் பட்டியலில் சென்னை 4வது இடத்திலும் உள்ளது. இதன் பின்னராவது, முதல்வர் தமிழகக் காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பாரா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். NCRB வெளியிட்ட கொலைகளின் அறிக்கையையும் ஷேர் செய்துள்ளார்.   

 

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...