Home அரசியல் அதிமுக அமைச்சரை திமுகவுக்கு இழுக்க மு.க.ஸ்டாலின் தூண்டில்... உதறலில் எடப்பாடியார்..!

அதிமுக அமைச்சரை திமுகவுக்கு இழுக்க மு.க.ஸ்டாலின் தூண்டில்… உதறலில் எடப்பாடியார்..!

வேலூர் மக்களவை தேர்தலில் புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தோற்றிருந்தாலும் கூட அது அ.தி.மு.க.வின் தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது.

வேலூர் மக்களவை  தேர்தலில் புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தோற்றிருந்தாலும் கூட அது அ.தி.மு.க.வின் தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது. ‘மிக குறைவான 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தலை தப்பியுள்ளது. இதனால் வெற்றி எங்களுக்கே’ என்று வெற்று வார்த்தைகளை வெளியில் சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட உள்ளுக்குள் நொந்து நூடுல்ஸ் ஆகி கொண்டிருக்கிறது அ.தி.மு.க. தலைமை.Manikandan

இந்த பஞ்சாயத்து ஒரு புறம் போய்க் கொண்டிருக்க, பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் மணி கண்டன் தி.மு.க.வுக்கு தாவுவதாக ஒரு  தகவல் கிளப்பியிருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க.வை கூட்டணிக்குள் இழுத்தது தி.மு.க.

ஆனால், பிரேமலதாவும், சுதீஷும் வேறு கணக்குப் போட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். அடுத்த சில நாட்களில் தே.மு.தி.க. உடைந்தது. இதன் பின்னணியில் நின்றது சாட்ஸாத் தி.மு.க.தான். கேப்டனிடமிருந்து பிரிந்த நிர்வாகிகள் பிறகு தி.மு.க.வில் இணைந்தனர்.

இதேபோல் தினகரன் கட்சியிலிருந்து கலைராஜன், செந்தில்பாலாஜி, தங்க தமிழ் செல்வன் என மூன்று முக்கிய தலைகளை இழுத்து, அக்கட்சியின் முக்கிய தூண்களை தகர்த்துவிட்டது தி.மு.க. இந்த நிலையில் அதன் அடுத்த இலக்காக இருப்பது அ.தி.மு.க.தான். அக்கட்சியினுள் தி.மு.க. எப்படி தன் தூண்டிலை போட்டு இழுக்கிறது? என்பதை பற்றி விளக்கும் விமர்சகர்கள்.

“அ.தி.மு.க.வின் ஆட்சி, அதிகாரத்தினால் கிடைக்கும் அதிகார மற்றும் பண பலன்களை அனுபவிப்பது சில சதவீதத்தினர் மட்டுமே. ஆனால், பெரும்பாலான சதவீத நிர்வாகிகள் இதற்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் வாரியம் உள்ளிட்ட பதவிகளை போடாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் தலைமை மீது கோபத்தில் இருக்கின்றனர்.

அவர்களில், மக்கள் செல்வாக்குடைய நபர்களாகப் பார்த்து பேசிவருகிறது தி.மு.க. ‘அடுத்து எங்கள் ஆட்சிதான். அ.தி.மு.க. முடிந்துவிடும். அதனால் இப்பவே இங்கே வந்துடுங்க, தேர்தல் சீட், ஜெயித்தால் அமைச்சர், அதுவுமில்லேன்னா வாரிய தலைவர் பதவி தர்றோம்’என ஆசை காட்டி இழுத்து வருகிறது.
யாரும் இதுவரை அசைந்து கொடுக்காத நிலையில், சமீபத்தில் எடப்பாடியாரால் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை எப்படியாவது தி.மு.க.விற்குள் இழுக்க படாதபாடு படுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.வில் சுப.தங்கவேலன் டீமை தவிர உருப்படியாக யாருமே இல்லாத நிலையில் மணிகண்டனை அந்த இடத்தில் வைப்போம் எனும் ஆசை காட்டியுள்ளனர்.

மணிகண்டன் இதுவரையில் ஓ.கே. சொல்லவில்லை. எடப்பாடியாரிடம் மன்னிப்பு கோரிய பின்னும் அவர் இவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்காவிட்டால், நிச்சயம் மணிகண்டன் ஆத்திரமடைவார். அப்போது அவர் எடுக்கும் முடிவானது தி.மு.க.வில் இணைவதாகதான் இருக்கும்.

ஏற்கனவே கொங்கு அமைச்சர்களின் ஆதிக்கம் அ.தி.மு.க.வில் அதிகரித்துக் கிடப்பதை எதித்துதான் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பேட்டியளித்து, சிக்கலில் சிக்கினார். இப்போது தி.மு.க.வுக்கு அவர் மாறிவிட்டால், கொங்கு அமைச்சர்களின் சொத்து சேர்ப்பு உள்ளிட்ட விஷயங்களை ஆதாரத்தோடு வெளிப்படுத்த தயங்கமாட்டார்.

அதிரடி பேர்வழியான மணிகண்டன் அ.தி.மு.க.வில் இருக்கும்போதே இப்படி வெளிப்படையாக போட்டுடைக்கிறார் என்றால் தி.மு.க.வில் இணைந்த பின் அ.தி.மு.க.வை எந்தளவுக்கு ஆவேசமாக பழிவாங்குவார்? என்பதே எல்லோரின் எண்ணமும். இதை நினைத்துதான் அ.தி.மு.க.வும் அலறிக் கிடக்கிறது.
உடனடியாக மீண்டும் மணிகண்டனுக்கு பதவி கொடுத்தால் எடப்பாடியார் மேல் கட்சியினருக்கு எழுந்திருக்கும் பயம் கலந்த மரியாதை பிளஸ் நம்பிக்கை கெட்டுவிடும். அதே நேரத்தில் மணியும் கட்சி தாவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! எனும் இரட்டை டாஸ்கில் தவிக்கிறது அக்கட்சி. மணிகண்டன் முகாம் மாறினால் தி.மு.க.வுக்கு பெரும் கொண்டாட்டம்தான்.” என்கிறார்கள்.

மணிகண்டன் தி.மு.க.வுக்கு சென்ற பின் சும்மா இருக்க மாட்டார், தமிழக அமைச்சர்களின் சொத்து விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் மற்றும் அரசாங்கத்தின் உள் சிக்கல்கள் என எல்லாவற்றையும் மக்கள் மத்தியில் போட்டுடைக்க தயங்க மாட்டார் என்பதால் உள்ளூற தன் சகாக்களிடம் குமுறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடியார்.

Most Popular

கோவை அண்ணா காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

வியாபாரிகளிடம் முறைகேடாக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வரும் கோவை அண்ணா காய்கறி மார்க்கெட் குத்தகைதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் மார்க்கெட் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில்...

பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருட்டு: பக்கத்து கல்லாவில் இருந்த 7 லட்சம் தப்பியது

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், ஆயில் மில் ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் அய்யனார்(40). இவர், நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்று விட்டார். நேற்று...

ஸ்டாலினை நாங்கள் முதல்வராக்குவோம்- காங்கிரஸ்

ஸ்டாலின் முதல்வராக தமிழக காங்கிரஸ் பாடுபடும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். சட்டபேரவை தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக...

திருமுடிவாக்கம் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

திருமுடிவாக்கத்தில் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அனைக்க தீயணைப்பு வீரர்கள் நெடு நேரமாக போராடினார்கள்.
Do NOT follow this link or you will be banned from the site!