Home உலகம் அதிக வேகமா? அதிக போதையா? இந்தோனேசிய விமான விபத்துக்கு என்ன காரணம்?

அதிக வேகமா? அதிக போதையா? இந்தோனேசிய விமான விபத்துக்கு என்ன காரணம்?

இந்தோனேசிய விமான விபத்துக்கு அதிக வேகம் அல்லது விமானி அதிகளவு மது போதையில் இருந்தது காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜகர்த்தா: இந்தோனேசிய விமான விபத்துக்கு அதிக வேகம் அல்லது விமானி அதிகளவு மது போதையில் இருந்தது காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு கடந்த மாதம் 29-ம் தேதி காலையில் புறப்பட்ட நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி 610 என்ற போயிங் ரக விமானம், வானில் பறந்த 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து ஜகார்த்தாவின் வடகடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி விமானத்தில் பயணித்த பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 189 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, நடைபெற்ற மீட்பு பணிகளின் போது, ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வகையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு, விபத்துக்கு முந்தைய நொடிகளில் என்ன நடந்தது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு மணிக்கு ஆயிரத்து 14 கிலோமீட்டர் வேகத்திற்கு சென்றதாக ராடார் பதிவுகளில் தெரிய வந்துள்ளது. அந்த வேகத்திலேயே அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது. மேலும், கடலை நோக்கி விமானம் செங்குத்தாக சென்று விழுந்தது ஏன் என்று ஆலோசித்து வரும் வல்லுனர்கள், விமானத்தின் அதிவேகம் தான் விபத்துக்கு காரணமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.

இதனிடையே, விமானத்தை இயக்கிய விமானி அதிகளவில் மது அருந்தி போதையில் இருந்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கியது இந்தியாவை சேர்ந்த விமானி பாவ்யே சுனேஜா என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ரூ.1 கோடி மதிப்புள்ள பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்!

தசரா பண்டிகையை முன்னிட்டு தெலங்கானாவில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தால் கன்யகா பரமேஸ்வரி தேவி சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத் அருகே கட்பவாலில் வசவி கன்யகா...

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் காவலர் கொடி அணிவகுப்பு பேரணி

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி,...

கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன்… ஸ்டாலினை கடுமையாக சாடிய அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றிய கீழமாத்தூரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைத்தார்.

அடுத்த போட்டியில் களம் இறங்குவாரா ரோஹித் ஷர்மா?

நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ள டீம் மும்பை இண்டியன்ஸ். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஆனால், அவர் தற்போது இரண்டு போட்டிகளாக ஆடவில்லை.
Do NOT follow this link or you will be banned from the site!