அணை உடைந்ததற்கு நண்டுகளே காரணம்- நீர்வளத்துறை அமைச்சர் 

மகராஷ்டிராவில் அணைந்ததற்கு நண்டுகளே காரணம் என நீர்வளத்துறை அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மகராஷ்டிராவில் அணை உடைந்ததற்கு நண்டுகளே காரணம் என நீர்வளத்துறை அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மகராஷ்டிரா மாநிலத்துக்கு உட்பட்ட ரத்னகிரி மாவட்டத்தில், உள்ள திவாரி என்ற அணை உடைந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.  14 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையானது பழுதடைந்து உடைந்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில் அணை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த், அணையில் அதிக எண்ணிக்கையில் நண்டுகள் இருந்ததே இந்த அணை உடைப்பு காரணம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர். தானாஜியின் கருத்தை விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், அணையை கட்டிய கான்ட்ராக்டர் எனும் ஊழல் சுறாவை காப்பாற்றுவதற்காக அப்பாவியான நண்டுகள் மீது அமைச்சர் பழியை போடுகிறார் என காமெடியாக கூறினார். ஒரு அணை உடைந்து ஊரே நீரில் மிதந்தி கொண்டிருக்கும்போது இத்தகைய விமர்சன பேச்சுக்கள் தேவையா என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

Most Popular

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி...

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...