Home சினிமா அட்வைஸ் பண்ணும் பாத்திமா பாபு, மூக்கை உடைத்த சேரன்: அனல் பறக்கும் பிக் பாஸ் புரொமோ!

அட்வைஸ் பண்ணும் பாத்திமா பாபு, மூக்கை உடைத்த சேரன்: அனல் பறக்கும் பிக் பாஸ் புரொமோ!

பிக் பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாத்திமா பாபுவுக்கும், சேரனுக்கும் வாக்குவாதம் ஏற்படுவது போல புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

அட்வைஸ் பண்ணும் பாத்திமா பாபு, மூக்கை உடைத்த  சேரன்: அனல் பறக்கும்  பிக் பாஸ் புரொமோ!

பிக் பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாத்திமா பாபுவுக்கும், சேரனுக்கும் வாக்குவாதம் ஏற்படுவது போல புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

cheran

ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த முறையும்  கமல் ஹாசனே  தொகுத்து வழங்க இருப்பதால் அரசியல் பேச்சுக்கு பஞ்சமிருக்காது எனலாம். நமக்கு மிகவும் பரிட்சயமான முகங்கள்  இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதால் போட்டி கடந்த சீசனை விட இந்த முறை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 

இந்நிலையில்  பிக் பாஸ் சீசன் 3-ன் இரண்டாவது புரொமோ  தற்போது வெளியாகியுள்ளது. அதில் நீண்ட நாட்களுக்கு பிறகு நம்மால்  பிக் பாஸின்  குரலை கேட்க முடிகிறது. ஹவுஸ்மேட்ஸ்  மத்தியில் பேசும் பிக் பாஸ், ‘நாட்டுல பல அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு இருக்குறது உங்க எல்லாருக்குமே தெரியும். அதனால் முதல்முறையா  தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கு’ என்று சொல்ல அதை ஹவுஸ்மேட்ஸ் சிலர் கைதட்டி வரவேற்கின்றனர். இதை கண்டு கடுப்பான பாத்திமா பாபு, பிக் பாஸ் வரலாற்றிலேயே தண்ணீரை சிக்கினம செலவு பண்ணுறதுங்குறது ஒரு அவலநிலை. இதை கைதட்டி வரவேற்கணும்னுகுறது கெடையாது’ என்று ராஜமாதா சிவகாமி ரேஞ்சுக்கு அட்வைஸ் பண்ண, உடனே சேரனோ, ‘இல்ல இல்ல அந்த லிமிடேஷன் கொண்டு வந்துக்காக கைதட்டினோம்’ என்று பதில் கூறுகிறார்.

vanitha

இதையெல்லாம் நம்ம விஜயகுமார் சாரோட பொண்ணு அதாங்க நம்ம வனிதா அக்கா குறுகுறுன்னு பார்க்குற மாதிரி இந்த வீடியோ முடிகிறது.

sherin

முன்னதாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ஷெரினை  சரவணன் என்னமா குண்டா ஆகிட்ட  என்று கேட்க, அதற்கு அவரோ, என்ன வந்தவுடனே என்னோட பாடியை பத்தி பேச ஆரம்பிச்சிடீங்க என்று சடாரென்று  சொல்ல , பயந்துபோன சரவணன், ஏம்மா  படத்துல ஒல்லியா பார்த்துருக்கேன் அதனால கேட்டேம்மா என்று அப்படியே பதுங்கி விட்டார்.   வழக்கமாக இரண்டு சீசனிலும் ஒருவாரத்திற்கு, ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்திகைன்னு’  பாட்டு படுற ரேஞ்சுக்கு இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்  இந்த சீசனில் ஆரம்பத்திலேயே  மல்லுகட்டுற  மாதிரி பேசுவது, இந்தமுறை நெறைய எண்டர்டெயின்மெண்ட் இருக்கும் போல…. என்ற எண்ணத்தை பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

அட்வைஸ் பண்ணும் பாத்திமா பாபு, மூக்கை உடைத்த  சேரன்: அனல் பறக்கும்  பிக் பாஸ் புரொமோ!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மனிதகுலத்துக்கு கொரோனாவிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்? – ஆராய்ச்சியாளர் கூறும் விளக்கம் இதோ!

கொரோனா இரண்டாம் அலை பரவல் இந்தியாவையே நிலைகுலைய வைத்துள்ளது. முந்தைய அலையை விட அதிவேகமாகப் பரவி வருவதால் வீட்டுக்குள்ளேயே மாஸ்க் அணிவது கட்டாயமாகியுள்ளது. முதல் அலையில் நகர்ப்புறங்களை மட்டும் தாக்கிய...

“மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகம்” அமைச்சர் செந்தில் பாலாஜி

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சட்டத்துறை அமைச்சர் திடீர் ஆலோசனை!

தமிழக முதல்வராக கடந்த 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் இக்கட்டான காலக்கட்டத்தில், முதல்வரானதால் அவருக்கு கூடுதல் சுமை ஏற்பட்டது....

மதுபோதையில் பணிக்கு வந்த மருந்தாளுநருக்கு மெமோ… திண்டுக்கல் அரசு மருத்துமனை அதிரடி!

திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க வந்தவரிடம் மதுபோதையில் தகராறு செய்த மருந்தாளுநருக்கு, மெமோ வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி...
- Advertisment -
TopTamilNews