Home சினிமா அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாராக இருப்பவர்கள் இந்த நம்பருக்கு அழைக்கவும்...உதவி இயக்குனரை உரிச்செடுத்த நடிகை !

அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாராக இருப்பவர்கள் இந்த நம்பருக்கு அழைக்கவும்…உதவி இயக்குனரை உரிச்செடுத்த நடிகை !

கார்த்திக் என்பவர் தன்னை துணை இயக்குநர் எனக் கூறிக்கொண்டு சஜிதாவின் மொபைலுக்கு அழைத்து பேசியிருக்கிறார். உங்கள் வயதென்ன?, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களா?, என தொடர்ந்த கேள்வி பாலியல் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாரா என முடிந்திருக்கிறது.

ஷட்டர் படத்துக்காக கேரள அரசின் மாநில விருதை வென்றவர் துணை நடிகை சஜிதா மடதில். தியேட்டர் கலைஞரான இவர், மிகத் தைரியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கக் கூடியவர்.

கார்த்திக் என்பவர் தன்னை துணை இயக்குநர் எனக் கூறிக்கொண்டு சஜிதாவின் மொபைலுக்கு அழைத்து பேசியிருக்கிறார். உங்கள் வயதென்ன?, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களா?, என தொடர்ந்த கேள்வி பாலியல் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாரா என முடிந்திருக்கிறது. தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறி இதனை கேட்டுள்ளார் அந்த நபர்.

saj

இதுகுறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த சஜிதா, நான் இதுபோன்ற கேள்விகளை சந்தித்தது இல்லை. எனக்கு இது மிகவும் அதிர்ச்சி அளித்தது. இதேபோன்ற கேள்வியை எல்லோரிடமும் கேட்பீர்களா அல்லது வாய்ப்பு தேடும் பெண்களிடம் மட்டும் கேட்பீர்களா என்று கேட்டேன். பின்னர் அவனுடைய நம்பரை டிரேஸ் செய்து, வேறு நபர் போல பேசி, படத்தை பற்றிய விபரங்களை கூறுமாறு கேட்டேன். அப்போதும் அவன் இதேபோல பாலியல் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாரா என்றபடியே பேசினான் என்றார்.

saji

அதன்பிறகு சஜிதா செய்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தனக்கு நடந்த அனுபவங்கள் குறித்து எழுதி, கார்த்தியின் மொபைல் நம்பரோடு அதனை பேஸ்புக்கில் பதிவு செய்தார். அதேபோல் இந்த அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாராக இருப்பவர்கள் இந்த நம்பருக்கு அழைத்து பேசுங்கள் எனவும் பதிவிட்டிருந்தார். அத்தோடு நில்லாமல் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

sajith

கார்த்தியின் மொபைல் தற்போது ஸ்விட்ச் ஆப்பில் உள்ளது. இப்படி துணிச்சலாக செயல்பட்டது குறித்து சஜிதா, இவனை போன்றவர்கள் பெண்கள் அட்ஜெஸ்ட் செய்யவேண்டும் என்பதை இயல்பான செயலாக மாற்றிவிடுவார்கள். இது அடுத்த தலைமுறை நடிகர்களை பாதிக்கும். அதனால்தான் இதனை பொதுவெளிக்கு கொண்டுவர நினைத்தேன். எனக்கு இத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இனி திரைத்துறையில் உள்ளவர்கள் பெண்களிடம் இதுபோன்ற கேள்விகளை கேட்க யோசிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

இதையும் வாசிக்க: முன்னாள் முதல்வர் மகன் கொலை: சொத்துக்காக மனைவியே கொன்றதாக பகீர் தகவல்?!

மாவட்ட செய்திகள்

Most Popular

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்… டைம்ஸ்நவ் சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு முடிவு

டைம்ஸ் நவ் சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் இறுதி முடிவுக்கும், வேறுபாடு இருக்காது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய என இரு கருத்துக்கணிப்புகளையும் அந்நிறுவனங்கள் வெளியிடும். கிட்டத்தட்ட அவற்றின் கருத்துக்கணிப்பின்படியே...

சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கும் சின்னம்மா பேரவை அமைப்பினர்!

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயல‌லிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் அறிக்கை என சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ, ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின்...

மேற்கு வங்கத்தில் அடுத்த திருப்பம்.. பா.ஜ.க.வுக்கு தாவிய 5 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் வரும்...

நான் மரு வச்ச துரைமுருகன்! நீதிமன்றத்தையே குழம்ப வைத்த திமுகவினர்!

.பழைய திரைப்படங்களில் மாறுவேடம் என்பதற்கு ஒரு சிறிய மருவை மட்டும் ஒட்டினால் போதும் என்பது போன்ற ஏமாற்று வேலைகளை பார்த்திருப்போம். அது போன்ற ஒரு சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது.
TopTamilNews