Home உணவு அடேங்கப்பா...!  ஒரு கிலோ சீஸ் 78 ஆயிரம் ரூபாயா! 

அடேங்கப்பா…!  ஒரு கிலோ சீஸ் 78 ஆயிரம் ரூபாயா! 

‘நீயெல்லாம் படிச்சு முடிச்சு என்ன பண்ணப் போற… கழுதை மேய்க்க தான் லாய்க்கு’ என்று இனி யாரையும் திட்டாதீர்கள். கழுதையின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ் விலை தான் ஒரு கிலோ 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது! 

‘நீயெல்லாம் படிச்சு முடிச்சு என்ன பண்ணப் போற… கழுதை மேய்க்க தான் லாய்க்கு’ என்று இனி யாரையும் திட்டாதீர்கள். கழுதையின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ் விலை தான் ஒரு கிலோ 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது! 

பாலிலிருந்து பக்குவப்படுத்தி, கட்டிப்பாலாலான திட உணவு தான் சீஸ். பாலில் இருக்கும் புரதமும், கொழுப்பும் சீஸ்ஸில் அதிகளவு இருந்தாலும், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் என்று பிற சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன. பொதுவாக, பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு, கழுதை போன்ற விலங்கினங்களின்  பாலில் இருந்து சீஸ் தயாரிக்கப்பட்டாலும், கழுதையின் பாலிருந்து தயாரிக்கப்படும் சீஸ்க்கு  உலகம் முழுக்கவே மவுசு அதிகம். 

cheese

அதிலும் உலகின் அரிய வகையான சீஸ் செர்பியாவில் தான் கிடைக்கிறது. வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல் பல ஊட்டச்சத்துக்களுக்காகவும் இவ்வளவு விலைக் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். செர்பியாவைச் சேர்ந்த ஒரு வகை கழுதையினம் அழிந்து வருவதையொட்டி, அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாகவே இந்த சீஸ் தயாரிக்கப்படுகிறது. 

அதிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சீஸ் ஒரு கிலோ 78,530 ரூபாய் (1000 யூரோ)க்கு விற்கப்படுகிறது. செர்பியாவைச் சேர்ந்த சீஸ் தயாரிக்கும் இந்தக் குழு, கடந்த 2012-ம் ஆண்டு முதல் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. செர்பியாவின் சிமிக்  என்பவர் தான் நடத்திய சோதனையில், பிறந்த குழந்தைக்குக் கூட நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்க தாய் பால் போல் கழுதை பாலைக் கொடுக்கலாம். கழுதைப் பால் ஆஸ்துமா போன்ற தீவிர நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

cheese

இன்னும் சில ஆராய்ச்சிகள், கழுதைப் பாலில் புரதச் சத்து அதிகமாக உள்ளது என்றும், மாட்டுப்பால் ஒத்துக்கொள்ளாதோருக்கு நல்ல மாற்று கழுதைப்பால் என்றும் கூறுகிறார்கள். இந்தக் கழுதைப் பாலோடு ஆட்டுப் பாலும் சேர்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு நாளைக்குக் கழுதைப் பாலின் அளவு மிகக் குறைவு என்பதால் அதை ஈடு செய்ய ஆட்டுப் பால் பயன்படுத்தப்படுகிறது என சிமிக் குழு கூறியுள்ளது. 

தற்போது வருடத்திற்கு 15 கிலோ சீஸ் விற்கப்படுவதாகக் கூறியுள்ளது. இதனால் அழிவை நோக்கி நகர்ந்த இந்த கழுதை இனம், நல்ல லாபம் தருவதால், விவசாயிகள் உற்சாகமாக மீண்டும் கழுதைகளை வளர்க்கத் துவங்கியுள்ளனர் என்கிறார் சிமிக்.

cheese

சீஸின் சுவை, மணம், தன்மை, தயாரிக்கும் முறை, பதப்படுத்தும் முறை, முதிர்வித்தல், அடங்கியுள்ள கொழுப்புச் சத்து போன்றவற்றைப் பொருத்து விலை மேலும் அதிகரிக்கும் என்று அதிர்ச்சியைக் கிளப்புகிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த இன்னொரு நாடு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 62 லட்சத்து 30 ஆயிரத்து 912 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 58...

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை!

ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். கருப்பு சட்டை அணிந்த ஓபிஎஸ் - இபிஎஸ்...

சபரிமலையில் அதிகரிக்கும் கொரோனா: தேவஸ்தான ஊழியர்கள் உட்பட 17 பேர் பாதிப்பு!

சபரிமலை தேவஸ்தான ஊழியர்கள்,காவலர் உட்பட 17 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 2000 பக்தர்கள் மட்டுமே...

பூந்தமல்லியில் காலேஜே இல்ல : அப்பல்லோ கல்லூரியிடம் பணத்தை இழந்த ஏழை மாணவி!

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சரண்யா என்ற மாணவி குடும்ப சூழல் காரணமாக பகுதி நேர வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும் என்று எண்ணி வந்துள்ளார். இதனால் அவர் அப்பல்லோ...
Do NOT follow this link or you will be banned from the site!