Home தமிழகம் அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வங்க  கடலில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகவுள்ள  நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில்  14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

வங்க  கடலில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகவுள்ள  நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்  என்று அறிவித்துள்ளது. 

maha

அரபிக்கடலில் மஹா  புயல்   வடமேற்கு திசையில்  நகர்ந்து நாளை அதிதீவிர புயலாக மாறும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மினிக்காய் தீவுகள், லட்சத்தீவுகள், லட்சத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஏரியில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே ஏரியில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள்...

ஹைதராபாத் vs பெங்களூர்! – யாருக்கு வேண்டும் கட்டாய வெற்றி!

ஐபிஎல் திருவிழாவில் நேற்றைய போட்டியில் அசத்தலான வெற்றியை ருசித்தது ராஜஸ்தான். இன்றைய போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர். பெங்களூர் டீம் ஏற்கெனவே 12...

இந்தியர்களுக்கு எமனாக மாறி வரும் ‘இதயம்’

உங்கள் உயிரை பாது காத்துக் கொள்வது உங்கள் கையில். ஆமாம்…ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சத்து 70 ஆயிரம் பேர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு...

திண்டுக்கல்: தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி...
Do NOT follow this link or you will be banned from the site!