Home தமிழகம் அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு வீழ்ந்த சரவணபவன் அண்ணாச்சி... அத்தனை மனைவிகள் இருந்தும் அடங்காத ராஜகோபால்..!

அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு வீழ்ந்த சரவணபவன் அண்ணாச்சி… அத்தனை மனைவிகள் இருந்தும் அடங்காத ராஜகோபால்..!

ஜீவஜோதியை அடைந்தே தீர வேண்டும் என வெறி கொண்டார் அண்ணாச்சி. சாந்தகுமாரை தன்வசப்படுத்தினார். ஆனாலும் சம்மதிக்கவில்லை ஜீவஜோதி.

சரவண பவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருந்தபோதிலும் மூன்றாவது மனைவியாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அதற்கு காரணம் மூட நம்பிக்கை. அடுத்து லேடீஸ் வீக். ஆம், ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட ராஜகோபால், ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொண்டால் இன்னும் வாழ்க்கையில் அதிக உயரத்துக்கு முன்னேறலாம் என அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஜீவஜோதியின் தந்தை சரவணபவனில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். அப்போது ஜீவஜோதியை பார்த்த அண்ணாச்சிக்கு அவர் மீது முதல் பார்வையிலேயே பலான ஆசை பீரிட்டது. jeevajothy

ஏற்கெனவே அண்ணாச்சிக்கு இரண்டு பொண்டாட்டிகள் இருந்தும் ஜீவஜோதியின் அப்பாவிடம் பெண்கேட்டார் ராஜகோபால் அண்ணாச்சி.  ஆனால், ஜீவஜோதி தனது உறவினரான பிரின்ஸ் சாந்தகுமாரை திருமணம் செய்துக்கொண்டார். 

ஆனாலும் ஜீவஜோதியை அடைந்தே தீர வேண்டும் என வெறி கொண்டார் அண்ணாச்சி. சாந்தகுமாரை தன்வசப்படுத்தினார். ஆனாலும் சம்மதிக்கவில்லை  ஜீவஜோதி.  பொறுமையிழ்ந்த அண்ணாச்சி ஜீவஜோதியின்  கணவரை கொன்றுவிட்டு, அவரை மறுதிருமணம் செய்துக்கொள்ளலாம் எனத் திட்டம் தீட்டி, பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று கொலை செ‌ய்து பள்ளத்தாக்கில் வீசினார். jeevajothy

இதனிடையே தனது கணவரை காண வில்லை என்று வேளச்சேரி காவல்நிலையத்தில் ஜீவஜோதி புகார் அளித்தார்.  அடுத்து கொடைக்கானலில் சடலமாக மீட்கப்பட்டார் பிரின்ஸ் சாந்தகுமார். இதனையடுத்து எனது கணவரின் மரணத்துக்கு காரணம் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் தான் என வழக்கு போட்டார் ஜீவஜோதி. மேலும் தன்னை கடத்த முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இ‌ந்த இரண்டு வழ‌க்‌கையும் விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், 2004 ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது.

கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோரு‌க்கு 7 முத‌ல் 9 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. கட‌த்த‌ல் வழ‌க்‌கி‌ல் ராஜகோபாலு‌க்கு 3 ஆ‌ண்டு‌ம் ம‌ற்ற 8 பேரு‌க்கு இர‌ண்டு ஆ‌‌ண்டுக‌ளும் த‌‌ண்டனை ‌‌வி‌தித்து தீர்ப்பு வழங்கியது. 

இ‌ந்த தீர்ப்பை எதிர்த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌நீ‌திபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி ஆகியோ‌ர் அடங்கிய அ‌ம‌ர்வு, ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த 10 ஆ‌ண்டு ‌சிறைத்த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரிப்பதாக அறிவித்து தீர்ப்பு வழங்கியது. Rajagopal

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்ததின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. பிணையில் இருந்த ராஜகோபால் நேற்றே சரணடைய வேண்டும்  என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனாலும் தனக்கு நரம்பியல் பிரச்சினை இருப்பதால் சிகிச்சை எடுத்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து கம்பி எண்ணப்போகும் காலத்தை தள்ளிப்போட்டு வருகிறார் அண்ணாச்சி. 

Most Popular

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘எஸ்பிபி-க்கு பாரத ரத்னா, நினைவு மண்டபம்’ : அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

மறைந்த பாடகர் எஸ்பிக்கு மத்திய அரசின் பாரத ரத்னா வழங்குவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி- ” நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பெரியார் சிலையைதொட்டு பார்க்கட்டும்”- திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு ஆவேசம்!

திருச்சிஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட இனாம் குளத்தூர், சமத்துவபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு , சிலர் செருப்பு மாலை போட்டு காவி சாயம் பூசி அவமரியாதை செய்திருந்தனர்.

நாகப்பட்டினம்- வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் – கடற்கரையில் குளிக்க அனுமதியில்லை!

நாகப்பட்டினம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.கடந்த 9 ஆம் தேதிமுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது....
Do NOT follow this link or you will be banned from the site!