அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறிய அரசு: நாங்குநேரி தொகுதி மக்கள் எடுத்த அதிரடி முடிவு!

நாங்குநேரி தொகுதியில் உள்ள மாவடி கிராமத்தில் குடிநீர், மின் சேவை, சாலையமைத்தல், பாலம் கட்டுதல் போன்ற அடிப்படை சேவைகளை வழங்க வேண்டும் என்று பல முறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் நாளை நாங்குநேரியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார். 

Nanguneri

இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் உள்ள மாவடி கிராமத்தில் குடிநீர், மின் சேவை, சாலையமைத்தல், பாலம் கட்டுதல் போன்ற அடிப்படை சேவைகளை வழங்க வேண்டும் என்று பல முறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

Protest

கோரிக்கை விடுத்துப் பல வருடங்கள் ஆகியும், இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மாவடி கிராம மக்கள் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கோடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அடிப்படை வசதிகளைச் செய்து தராவிடில் வாக்களிக்காமல் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Protest

 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....