Home சினிமா அடப்பாவிகளா, இந்தளவுக்காடா காஞ்சு போயிருக்கீங்க?

அடப்பாவிகளா, இந்தளவுக்காடா காஞ்சு போயிருக்கீங்க?

கடந்த வாரம் ரிலீசான அர்ஜூன் பாட்டியாலா என்ற படத்தில் நடித்திருக்கும் சன்னி லியோன், இன்னொரு கேரக்டரிடம் தன் போன் நம்பர் என ஏதோ ஒரு நம்பரை சொல்ல, அகர்வாலின் கெட்ட நேரம் அந்த நம்பர் அவரின் சொந்த நம்பராய் போய்விட, பின்னே என்ன? அனித் அகர்வாலிடம் வாலாட்டியிருக்கிறார்கள் காமகொடூரர்கள்.

புனித் அகர்வால், எந்த வம்புதும்புக்கும் போகாத டெல்லிவாசி. தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். கடந்த வெள்ளிக்கிழமைவரை சாந்தசொரூபியாக இருந்த அகர்வால், இப்போது கொலைவெறியில் சுத்திக்கொண்டு இருக்கிறார். காரணம், அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகள். வெள்ளிக்கிழமை மதியம் சாப்பிட உட்காரும்போது வந்தது முதல் அழைப்பு, “ஹலோ சன்னி லியோன்தானே, நான் உங்க பரம விசிறி, உங்களுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன், உங்களை ஒரு தடவை நேர்ல மீட் பண்ணனும்” என ஏற்ற இறக்கத்தோடு கிறக்கமாக பேச, இல்லீங்க ராங் நம்பர், நான் புனித் அகர்வால் என்று சொல்லி கட் பண்ணுகிறார்.

Sunny in Arjun Patiala

அந்த போன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, முன்பின் தெரியாத நம்பரில் இருந்து ஒரு மிஸ்ட் கால். முக்கியமான அழைப்பாக இருக்கபோகிறது என அந்த நம்பருக்கு அழைத்தால், ‘ஹலோ சன்னி, நீங்களே எனக்கு போன் பண்ணுவீங்கன்னு நினைக்கலே, நான் உங்க ஃபேன்..” என ஏற்ற இறக்கத்தோடும் அதே கிறக்கத்தோசும் பேச, குழம்பிப்போன அகர்வாலுக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை, சன்னி லியோன் போனை நாம தெரியாம எடுத்துட்டு வந்துட்டோமா என அவர் போனை செக் பண்ணியிருக்கிறார். அவருடைய அதே சைனா மொபைல். நேரம் போக போக, அழைப்புகள் தொடர்ந்து வரவே, கொஞ்ச நேரம் பொறுப்பாக பதில் சொல்லியிருக்கிறார். அதன்பின், போனில் அழைத்தவர்கள் எடுத்த எடுப்பிலேயே ஆபாசமாக பேச, “டேய் நான் அவனில்லடா” என கெஞ்ச வேண்டிய அளவுக்கு போய்விட்டது நிலைமை. பிறகுதான் தெரிந்திருக்கிறது, கடந்த வாரம் ரிலீசான அர்ஜூன் பாட்டியாலா என்ற படத்தில் நடித்திருக்கும் சன்னி லியோன், இன்னொரு கேரக்டரிடம் தன் போன் நம்பர் என ஏதோ ஒரு நம்பரை சொல்ல, அகர்வாலின் கெட்ட நேரம் அந்த நம்பர் அவரின் சொந்த நம்பராய் போய்விட, பின்னே என்ன? அனித் அகர்வாலிடம் வாலாட்டியிருக்கிறார்கள் காமகொடூரர்கள். போலீசில் புகார் சொல்லிவிட்டு, போனை பரணில் தூக்கிப் போட்டுவிட்டு காசிக்கு ரயில் ஏறியிருக்கிறார் அகர்வால்! எவ்வளவு டீப்பா போறாய்ங்க!
 

மாவட்ட செய்திகள்

Most Popular

ராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியத்தை கசியவிடுவது ஒரு தேசத்துரோகம்… ஏ.கே. அந்தோணி

ராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியத்தை கசியவிடுவது ஒரு தேசத்துரோகம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார். ரிபப்ளிக் டிவி...

மம்தாவுக்கு 62 ஆயிரம் வாக்குகள்தான.. ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்க 2.13 லட்சம் பேர் என்னிடம் உள்ளனர்.. சுவேந்து

மம்தா பானர்ஜி 62 ஆயிரம் வாக்குகளைதான் நம்பியுள்ளார். ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழங்க என்னிடம் 2.13 லட்சம் பேர் உள்ளனர் என்று பா.ஜ.க.வின் சுவேந்து ஆதிகாரி தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதல் குறைவு… ராகுல் காந்தி தாக்கு

பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதலில் குறைவு உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் கேபிடல் ஹில்லில் (அந்நாட்டு பாராளுமன்றம்) டிரம்ப் ஆதரவாளர்கள்...

உ.பி. சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம் திறப்பு.. பா.ஜ.க. அலுவலகத்தில் அந்த படத்தை வையுங்க.. கொந்தளித்த காங்கிரஸ்

உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பட கேலரியில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உத்தர பிரதேச விதான் பரிஷத் (சட்டப்பேரவை)...
Do NOT follow this link or you will be banned from the site!