Home சினிமா அஜீத் பாணியில் வெளிமாநிலங்களுக்கு ஷிஃப்ட் ஆகும் தளபதி 63

அஜீத் பாணியில் வெளிமாநிலங்களுக்கு ஷிஃப்ட் ஆகும் தளபதி 63

பிடிக்கிறதோ இல்லையோ சிலசமயம் அஜீத் வழியைப் பின்பற்றியே ஆகவேண்டிய சூழ்நிலை நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுவிடுகிறது.

அஜீத்  பாணியில் வெளிமாநிலங்களுக்கு ஷிஃப்ட் ஆகும் தளபதி 63

சென்னை:  பிடிக்கிறதோ இல்லையோ சிலசமயம் அஜீத் வழியைப் பின்பற்றியே ஆகவேண்டிய சூழ்நிலை நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுவிடுகிறது. லேட்டஸ்டாக விஜய் 63 படத்துக்கும் அஜீத் பாணியில் ஒரு அதிரடி முடிவெடுத்திருக்கிறார் தளபதி.

vijay

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. படத்தயாரிப்பு நிறுவனமும் இயக்குநர் அட்லியும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்றபோது, சென்னையில் நடத்தினால் மட்டுமே இங்குள்ள கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என விஜய் பாட்டாளிகளின் பங்காளி அவதாரம் எடுத்ததால் சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

vijay

நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு உள்ளிட்ட பிசியான  பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் சென்னையில் லைவ் லொகேஷன்களில் குறிப்பாக  காசிமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த போது, விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் பெருமளவு கூடிவிட்டார்கள். இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைக்கவேண்டி வந்தது.மட்டுமன்றி  அதே போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்ததால் பலமுறை நினைத்த காட்சிகளை எடுக்கமுடியாமல் படப்பிடிப்பை பாதியில் முடித்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.

atlee

இப்படி அடிக்கடி படப்பிடிப்பு தடைபட்டதால் சற்று அப்செட் ஆன விஜய் சின்னதாக ஓரு ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு சென்றிருந்தார். அந்த ஓய்வு முடிந்து அவர்  விரைவில் திரும்பவுள்ளதைத் தொடர்ந்து ‘தளபதி 63’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இனி ரிஸ்க் எடுக்கும் எண்ணமின்றி மீதமுள்ள படப்பிடிப்புகள்  முழுமையாக அரங்குகளில் மட்டுமே நடைபெறவுள்ளது. இதற்காக பின்னி மில்ஸ், ஈவிபி மற்றும் ஆதித்யராம் ஸ்டூடியோஸ் ஆகியவற்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ajith

என்று அல்டிமேட் ஸ்டாராக மாறினாரோ அன்றிலிருந்தே அஜீத் சென்னையிலோ தமிழகத்திலோ பெரும்பாலும் லைவ் லொகேஷன்களில் படப்பிடிப்பை வைத்துக்கொள்வதில்லை. மதுரை, தேனி வட்டாரங்களில் நடந்த விஸ்வாசம் பட ஷூட்டிங்கைக் கூட வேறு மாநிலத்தில் வைத்துக்கொண்டவர் அஜீத். தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படமும் முழுக்க முழுக்க ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே நடந்துவருகிறது.தளபதி 63க்குப் பின்னர் இனி விஜய் படங்களின் ஷூட்டிங்கும் வேறு மாநிலங்களுக்கு ஷிஃப்ட் ஆகும் வாய்ப்பே அதிகமாம்.

இதையும் வாசிக்க: அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் துவங்கிவிட்டேன்; #HBDPrabhuDeva

அஜீத்  பாணியில் வெளிமாநிலங்களுக்கு ஷிஃப்ட் ஆகும் தளபதி 63

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்! அடித்துக்கூறும் எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தப்படலாம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா உயிர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.35 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.46 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

வீடு இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

வீடு இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இனி பேட்ஸ்மேன் இல்லை ‘பேட்டர்ஸ்’

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பேட்ஸ்மேன் என்கிற கிரிக்கெட் சொல்லுக்கு மாற்றாக பேட்டர் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட்...
TopTamilNews