Home அரசியல் அஜித்தை வைத்து அரசியல் செய்தால்..? கமலுக்கு கல்தா கொடுத்த தல...!

அஜித்தை வைத்து அரசியல் செய்தால்..? கமலுக்கு கல்தா கொடுத்த தல…!

அந்த விழாவில் கமல் அரசியல் பேசுவார். அதில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற ஜாக்கிரதையால் அவர்கள் இருவரும் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக உங்கள் நான் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்கிறார். 

அதேவேளை அஜித்தும், விஜயும் பங்கேற்கவில்லை. விஜய் படப்பிடிப்பில் இருப்பதால் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. வழக்கம்போல எந்த விழாக்களையும் புறக்கணிக்கும் அஜித், இந்த நிகழ்ச்சியையும் கண்டுகொள்ளவில்லை.
 

அவர் கலந்து கொள்ளாததற்கு பலரும் சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர். ’கொஞ்சமாது சக மூத்த கலைஞர்களுக்கு மரியாதை குடுங்கடா.. மத்த இண்டஸ்ரி பாத்தாவது கத்துக்கோங்க..’’ எனப் பொங்கி வருகிறார்கள். 

ஆனால், அஜித்தும், விஜயும் இந்த விழாவில் கலந்துன் கொள்ளாததற்கு காரணம், கமல் இப்போது மூத்த நடிகர் மட்டுமல்ல. அரசியல்வாதியும் கூட… அந்த விழாவில் கமல் அரசியல் பேசுவார். அதில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற ஜாக்கிரதையால் அவர்கள் இருவரும் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள், ‘’யார் உங்களை எதிர்ப்பார்க்க சொன்னது #Kamal60 இது அரசியல் விழாவாக மாறும் பாராட்டி பேசுபவர்கள். இதை அரசியல் பேசுவார்கள் கமல். அது செய்வார் இது செய்வார் என பிறகு கலைஞர் பாராட்டு விழா அஜித், விழாக்களுக்கு வரசொல்லி மிரட்டுவதாக சொன்னவர் அஜித். இந்த நிகழ்ச்சியும்  அதுபோலவே  நடந்து விடக்கூடாது என்பதால் அஜித் வரவில்லை என கூறுகிறார்கள்.

 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews