Home சினிமா அசுரன் – பிரிப்பவன் அல்ல; பிணைப்பவன்! பாரதிராஜா புகழாரம்

அசுரன் – பிரிப்பவன் அல்ல; பிணைப்பவன்! பாரதிராஜா புகழாரம்

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணி மீண்டும் அசுரன் படம் மூலம் இணைந்துள்ளது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணி மீண்டும் அசுரன் படம் மூலம் இணைந்துள்ளது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை  மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தின் கதையம்சமும், வசனங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் பாரதிராஜா பாராட்டியுள்ளார். 

Asuran

இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  “என் இனிய தமிழ் மக்களே, ‘தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை’யின் சார்பாக, உங்கள் #பாரதிராஜா…. நமக்குள் சாதி சமய வேற்றுமைகள் இல்லை. இந்தக் கருத்தைத்தான் திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் #வெற்றிமாறன். சாதி, சமயம், மொழி, இனம், நாடு போன்ற தற்சார்புப் பற்றுகளிலிருந்து (Self regarding sentiments) நீங்கியவர் வெற்றிமாறன். அதனால்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் துயரத்தை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அவர்களது எழுச்சியை – அவர்களது வலியையும், அவமானத்தையும் உள்வாங்கி – திரைப்படமாக எடுத்திருக்கிறார். ஒடுக்கப்பட்டோரின் திரைப்படத்தை ஒடுக்கப்பட்டோர்தான் எடுக்க முடியும் என்பது பழங்கதை என்ற உண்மையை, நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் கரிசல்காட்டுச் சூறைக் காற்றின் வேகத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த கலைஞர்கள் வெற்றிமாறனைக் காட்டிலும் சிறந்த படத்தினைக் கொடுக்கமுடியும், தங்களது நேரடி அனுபவங்களைக் கதையாகச் சொல்வதால். அப்படியான படங்கள் – அசுரனையும் மிஞ்சிய அப்படியான படங்கள் – தமிழில் ஓடட்டும். அப்படிப் படங்கள் வரும்போது அந்தப் படங்களை வரவேற்கிற முதல் தமிழனாக இந்த பாரதிராஜா ஓடோடி வந்து அங்கே நிற்பேன். ஆனால், என்னை முந்திக்கொண்டு வந்து நிற்கிற ஆள் வெற்றிமாறன்.

அதற்கு முன்னர், தமிழக மக்களாகிய நாம், அசுரனை வரவேற்போம். இந்தப் படத்தில் வருகிற ஒரு வசனம் குறிப்பிட்ட வகுப்பினரை – உயர் வகுப்பினராகத்  தம்மை அறிவித்துக்கொள்கிற குறிப்பிட்ட வகுப்பினரை -க் காயப்படுத்தியிருப்பதாகக் கருத்துகள் வெளிவந்தன. பின்னர், அந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது. அசுரனின் நோக்கம், தமிழக மக்களில் எவரையும் புண்படுத்துவது அல்ல; தமிழக மக்களை, ‘நாம்’ என்ற ஓருணர்ச்சிக்குப் பண்படுத்துவதாகும். இருந்தபோதிலும், எவராவது புண்பட்டிருந்தால் வெற்றிமாறனின் சார்பாக, ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை’ தனது வருத்தத்தைத் தெரிவித்துப் கொள்கிறது. இப்படியொரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்தமைக்காக, வகுப்பு வேற்றுமைகள் ஒழிந்ததொரு தமிழ் நிலத்தைக் கனவுகண்டமைக்காக, வெற்றிமாறனின் பெருமையானது பாரதிராஜாவாகிய எனது பெருமையுமாகும்.

Asuran

அதனாலேயே வெற்றிமாறனின் சார்பாக நான் கேட்டுக்கொள்வதெல்லாம் … உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அந்த வசனம் நீக்கப்பட்டு விட்டது. கசப்பை மறந்துவிட்டுப் படம் பாருங்கள். உங்களுக்கும் பிடித்த படம் தான் என்று உணர்வீர்கள். ஒரு முறை பார்த்தால் பிறரையும் பார்க்கச்சொல்லி நீங்களே பரிந்துரை செய்வீர்கள்.‘எல்லாவித அடையாளங்களையும் உதறுவதுதான் ஒருவனை மானுடன் ஆக்கும். இதைச் சாதிப்பது மனிதாயத்தையும் தாண்டிய மஹாமனிதாயமாகும்.’- கவிஞர் #பிரமிள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : காப்பக இயக்குநருக்கு போலீஸ் வலைவீச்சு!

பாலியல் தொல்லை கொடுத்த காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு...

“ஏன்யா நான் வேணாம் ,என் மகன் மட்டும் வேணுமா?” -காதலியின் மகனை கடத்திய தந்தை .

கல்யாணம் செய்யாமல் வாழ்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த மகனை கடத்திய ஒரு தந்தையை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சிறுவனை மீட்டார்கள்

‘சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு’ : அந்தர் பல்டி அடித்த பிரேமலதா

ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தனது ஆதரவு இருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகளுக்கிடையே தேர்தல்...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி கம்பம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!