தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களில் வணிக வளாகங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.
சீன நாட்டில் பரவத் தொடங்கி தற்போது, 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இதன் காரணமாகத் தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களில் வணிக வளாகங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. மேலும், 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக அரசு, மக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பீதியால் மால்கள், தியேட்டர்கள் எல்லாம் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால், டாஸ்மாக்குகள் மட்டும் மூடப்படவில்லை.
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) March 16, 2020
இது குறித்து நடிகர் எஸ்.வி சேகர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “வைரஸுக்கு பயந்து பள்ளிக்கூடத்தை மூடுறாங்க.. ஆலயங்களை மூடுறாங்க… டாஸ்மாக் மட்டும் ஏன் மூடமுடியவில்லை?..’அங்க நோய் வராதா ஆபீசர்!” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ஒரு நெட்டிசன். ‘ உங்களைப் போன்ற நாட்டின் குடிமக்கள் நிறையப் பேர் உள்ளார்கள் அதனால் தான்!’ என்று கமெண்ட் செய்துள்ளார்.