Home தமிழகம் அக். 30 தேவர் ஜெயந்தி.... இந்த வருஷம் ஏகப்பட்ட கெடுபிடி! அதிருப்தியில் ஆதரவாளர்கள்!

அக். 30 தேவர் ஜெயந்தி…. இந்த வருஷம் ஏகப்பட்ட கெடுபிடி! அதிருப்தியில் ஆதரவாளர்கள்!

தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அஞ்சலி செலுத்தி விட்டுச் செல்ல வேண்டும்

பசும்பொன் தேவர் குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வருகின்ற 30ஆம் தேதியன்று நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், தென் மண்டல ஐஜி கே.பி.சண்முக ராஜேஸ்வரன், ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஸ் குமார் மீனா, காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் பசும்பொன் தேவர் நினைவிடம் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டிய இடங்களை ஆய்வு செய்தனர். 

ஆய்வினைத் தொடர்ந்து ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வருடம் தேவர் ஜெயந்தியையொட்டி நிறைய மாற்றங்களைச் செய்திருப்பதாக தெரிவித்தார்.  ஏறத்தாழ 8 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், பிற மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும். தலைவர்களுடன் செல்லும் பொழுது 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். என்றும், தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அஞ்சலி செலுத்தி விட்டுச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சொந்த வாகனங்களில் வருபவர்களை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதுநாள் வரையில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வாகனங்களில் கூட்டமாக தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அஞ்சலி செலுத்த வருவார்கள். சொந்த வாகனங்களை மட்டுமே அனுமதிப்போம் என்று அறிவித்திருப்பது அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

பெற்ற தாயுடன் சேர்ந்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கடந்த ஜூலை மாதம் போக்ஸோ சட்டத்தின் கீழ் நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார். 15 வயது சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல்...

தேர்தல் களம்: திரை மறைவில் உருவாகிறது மூன்றாவது கூட்டணி!

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளாக அதிமுக., திமுக இருந்து வருகின்றன. தேர்தல் சமயங்களில் இவர்கள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவார்கள். மத்தியிலும், வட மாநிலங்களிலும் பெரிதாகப் பேசப்படும் பாஜக...

’’நாராயணசாமி நாவடக்கணும்; எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளணும்’’- வையாபுரி மணிகண்டன் எச்சரிக்கை

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கிலும் எதிர்கட்சியின் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு...

விவசாய மசோதா நகலை எரித்து சென்னையில் போராட்டம் : 100 பேர் கைது!

விவசாய மசோதாவை எதிர்த்து மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.
Do NOT follow this link or you will be banned from the site!