Home தொழில்நுட்பம் அக் 13ம் தேதி ஐபோன் 12 - அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டம்?

அக் 13ம் தேதி ஐபோன் 12 – அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டம்?

வரும் அக்டோபர் 13ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் நிலவி வரும் முடக்க நிலையால் ஐபோன் 12 ஐ அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் தாமதப்படுத்தி வந்தது. இந்நிலையில் செப்டம்பரில் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் 13ம் தேதி ஐபோன் 12ஐ அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஐபோன் 12 இன் அறிமுக விழா 13ம் தேதி நடக்கும் என்றும், 16ம் தேதி முதல் ப்ரீ ஆர்டர் தொடங்கும் என்றும் 23ம் தேதி முதல், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி ஆகிய போன்கள் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் புரா மேக்ஸ் ஆகிய போன்கள் நவம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என ஆப்பிள் இன்சைடர் உள்ளிட்ட பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளன.

இதற்கேற்ப, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு தான் அதன் ஆன்லைன் ஸ்டோரை திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா டாலர் பறிமுதல்

கொரொனா தொற்று அதிகரித்து வரும் இந்தச் சூழலைக் கடத்தல் காரர்களும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் ஓரிரு மாதங்களாக தங்கம், கரன்சி கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. சமீபத்தில் இது அதிகரித்திருக்கிறது.

டார்ச்சர் தந்த டாக்டர்கள்! துப்பட்டாவில் தூக்கிட்டு நர்ஸ் தற்கொலை

குஜராத் மாநிலம் சூரத்தில் மேகா ஆச்சார்யா(28) என்ற பெண் நர்ஸாக இருந்து வந்தார். மேகாவின் கணவர் வேலை நிமித்தமாக வெளி ஊரில் தங்கி இருந்த நிலையில், மேகா வீட்டில் துப்பாட்டாவால்...

முதல் இடத்துக்கு முன்னேறுமா டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஹைதராபாத் vs டெல்லி!

ஐபிஎல் தொடரில் நான்கு அணிகள் 12 போட்டிகள் ஆடி விட்டன. அதிலிருந்து பாயிண்ட் டேபிளில் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டன. இன்றைய போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் vs...

”வட்டிக்கு வட்டி – சீக்கிரம் திருப்பி கொடுங்க”! நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி விதிக்கப்படாது என்ற அரசின் அறிவிப்பை, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிதி நிறுவனங்களும் உடனடியாக அமல்படுத்த ரிசர்வ்...
Do NOT follow this link or you will be banned from the site!