Home லைப்ஸ்டைல் ஃபுட் கோர்ட்: மொறு மொறுப்பான நெத்திலி மீன் வறுவல்!

ஃபுட் கோர்ட்: மொறு மொறுப்பான நெத்திலி மீன் வறுவல்!

மீனிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மீன் வறுவல் என்பது பலரின் விருப்பமாக‌ உள்ளது. மீனை வறுவல் செய்யும் போது பெரும்பாலோர் கடைகளில் ரெடிமேடாக உள்ள பொடியை உபயோகப்படுத்துகின்றனர்.

மீனிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மீன் வறுவல் என்பது பலரின் விருப்பமாக‌ உள்ளது. மீனை வறுவல் செய்யும் போது பெரும்பாலோர் கடைகளில் ரெடிமேடாக உள்ள பொடியை உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் இவற்றைப் பயன்படுத்தும் போது அவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. அதைத் தவிர்த்து உடலுக்குத் தீங்கில்லாத வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி மசாலாவைத் தயார் செய்து சுவையான  நெத்திலி மீன் வறுவல்  எப்படிச் செய்வது என்பதைக் காணலாம்!

தேவையான பொருட்கள்

  • நெத்திலி மீன் – அரை கிலோ
  • மிளகாய் தூள் – 25 கிராம்
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
  • சீரக தூள் – ஒரு டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • ஓமம் – கால் டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு – ஐந்து பல் (நசுக்கியது)
  • தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்
  • சோள மாவு – 25 கிராம்
  • அரிசி மாவு – 25 கிராம்
  • முட்டை வெள்ளை கரு – அரை முட்டை

nethilifry

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் நெத்திலி மீன், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், ஓமம், கறிவேப்பிலை, பூண்டு, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பிறகு, அதில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளைக் கரு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • பின், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உதிரிஉதிரியாக போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.  

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

திண்டுக்கல் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல்...
Do NOT follow this link or you will be banned from the site!