Home தொழில்நுட்பம் ஃபார்வேர்டு மெசேஜ் செய்தால் வாட்ஸ்அப் போட்டுக் கொடுத்து விடும்: புதிய அப்டேட்

ஃபார்வேர்டு மெசேஜ் செய்தால் வாட்ஸ்அப் போட்டுக் கொடுத்து விடும்: புதிய அப்டேட்

டெல்லி: வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்தால் அதை பயனர்களுக்கு காண்பிக்கும் வகையில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

ஃபார்வேர்டு மெசேஜ் செய்தால் வாட்ஸ்அப் போட்டுக் கொடுத்து விடும்: புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் உண்மைக்கு புறம்பான போலி தகவல்கள் மிகவும் அதிகளவில் பகிரப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியது அவசியமாகிறது. ஆனால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் பலரும் இதை செய்வதில்லை. ஒரே க்ளிக் மூலம் போலியான தகவல்களை மற்றவர்களுக்கும் எளிதில் ஃபார்வேர்டு செய்து விடுகிறார்கள். இதனால் சர்ச்சைகள், குழப்பங்கள், பிரச்சனைகள் எழுகின்றன.

இந்நிலையில், வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்தால் அதை பயனர்களுக்கு காண்பிக்கும் வகையில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இனி வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்தால் அதை பெறும் பயனருக்கு Forwarded என்று சுட்டிக் காண்பிக்கிறது. அதாவது குறுந்தகவலின் இடது மேற்புறத்தில் இவ்வாறு காட்டுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட குறுந்தகவல் நேரடியாக டைப் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறதா அல்லது மற்றவர்களிடம் இருந்து ஃபார்வேர்டு செய்யப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த புதிய ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சத்தை வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் பெற முடியும். இந்த அம்சம் மூலம் வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் போலியான செய்திகளை குறைக்க உதவியாக இருக்கும். மேலும், கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் சஸ்பீஷியஸ் லின்க் டிடெக்ஷன் (suspicious link detection) அம்சம் சோதனை செய்யப்படுவது தெரிய வந்தது.

இதன் மூலம் வாட்ஸ்அப்-இல் பகிரப்படும் இணைய முகவரிகள் போலியானதா என்பதை வாட்ஸ்அப் செயலி  தானாகவே கண்டறியும். இதனால் போலி இணையதளங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் வலைதளங்களை பயனர்கள் எளிதில் கண்டறிய முடியும்.

ஃபார்வேர்டு மெசேஜ் செய்தால் வாட்ஸ்அப் போட்டுக் கொடுத்து விடும்: புதிய அப்டேட்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், வட்டி விகிதம் தொடர்பான அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள்...

டிஎன்பிஎல்: 2வது ஆட்டத்தில் கோவையை வீழ்த்திய திண்டுக்கல்

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டிஎன்பிஎல்: திருச்சி அணி த்ரில் வெற்றி

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 7வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள்...

மீண்டும் களைகட்டவுள்ள ஐபிஎல் திருவிழா! அட்டவணை வெளியீடு

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஐபிஎல்...
- Advertisment -
TopTamilNews