தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

 

தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

தமிழகத்தில் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் என்று தி மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரை: தமிழகத்தில் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் என்று தி.மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல்

vote

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அதே சமயம் தமிழகத்திலும் தேர்தல் களம்  சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை, சவால்கள், வாக்குறுதிகள் என திமுக அதிமுக போன்ற கட்சிகள்  தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். 

திமுக கூட்டணி மாபெரும் வெற்றி

times now

இதனிடையே சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தைப் பொறுத்தவரை   39 தொகுதிகளில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 5 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 பாஜகவுக்கு ஆதரவு; முற்றிலும் பொய்யானது!

alagiri

இந்நிலையில், இது குறித்து  தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும்  முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, ‘நானும் ஹெச்.ராஜாவும் எப்போதோ எடுத்து கொண்ட புகைப்படத்தை வைத்து கொண்டு, நான் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று தவறான செய்தியை பரப்புகிறார்கள். நான் யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. நான் யாருக்கும் ஆதரவும் கூறவில்லை, அதே சமயம் என்னையும் யாரும் அணுகவில்லை.  வேட்பாளர்கள் சந்திக்க வந்தால் நான் சந்திப்பேன். ஆனால் யாரும் அப்படி என்னை பார்க்க வருவதாக தெரியவில்லை’ என்றார். 

கருத்து கணிப்புகள் அல்ல, கருத்து திணிப்புகள்

stalin

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்  என்று கூறப்பட்டுள்ளதே என்று கேள்வி முன்வைக்கப்பட்ட போது, அவையெல்லாம் கருத்து கணிப்புகள் அல்ல, கருத்து திணிப்புகள். பணம் கொடுத்து அப்படி சொல்லச் சொல்கிறார்கள்’ கடுமையாகச் சாடியுள்ளார். ஆனால்  அழகிரியின் இந்த பேச்சை கேட்டு ஸ்டாலின் ஆதரவாளர்களோ கடுப்பாகி உள்ளனர்.

முன்னதாக மதுரை மாநகரில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராகக்  களமிறங்கியுள்ள சு.வெங்கடேசன் அழகிரியை சந்தித்து ஆதரவு கோருவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

இதையும் வாசிக்க: சிரஞ்சீவி குடும்பத்திற்கு மாப்பிளையாகும் விஜய் தேவரகொண்டா?