இந்த முறை பட்ஜெட் வேற மாதிரி இருக்கும்… நடுத்தர வர்த்தகத்தினர், மாத சம்பளதாரர்கள் ரொம்ப எதிர்பார்க்காதீங்க…

 

இந்த முறை பட்ஜெட் வேற மாதிரி இருக்கும்… நடுத்தர வர்த்தகத்தினர், மாத சம்பளதாரர்கள் ரொம்ப எதிர்பார்க்காதீங்க…

நடுத்தர வர்த்தகத்தினர் மற்றும் மாத சம்பளதாரர்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இந்த முறை பட்ஜெட்டில் அதற்கான வாய்ப்புகள் இருக்காது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது 9வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஏனென்றால், கொரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் பொருளாதாரத்தில் பின்னடைவு, நிதிப்பற்றாக்குறை, வேலையின்மை ஆகிய பிரச்சினைகள் நிலவுவதால் அதற்கு தீர்வு காணும் வகையில்தான் மத்திய பட்ஜெட்டை மத்திய அரசு தயார் செய்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை பட்ஜெட் வேற மாதிரி இருக்கும்… நடுத்தர வர்த்தகத்தினர், மாத சம்பளதாரர்கள் ரொம்ப எதிர்பார்க்காதீங்க…
மத்திய பட்ஜெட்

இன்று தாக்கல் செய்யப்பட பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு, பாதுகாப்புத்துறை, தொழில்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றுக்குதான் அதிகமான நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கை கொடுக்கும் துறைகள் என்பதால் அந்த துறைகளுக்கு கட்டாயம் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் எல்லையில் நமக்கு கடும் குடைச்சல் வருவதால் நமது ராணுவத்தை மேம்படுத்துவது அவசியம் அதனால் பாதுகாப்பு துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்வதை தவிர வேறு வழியில்லை. நாட்டின் உயிர் நாடியாக இருக்கும் வேளாண்துறையில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடி வரும் விவசாயிகளை ஐஸ் வைக்க பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு மத்திய அரசு ஏதாவது சலுகைகளை அறிவிக்கும்.

இந்த முறை பட்ஜெட் வேற மாதிரி இருக்கும்… நடுத்தர வர்த்தகத்தினர், மாத சம்பளதாரர்கள் ரொம்ப எதிர்பார்க்காதீங்க…
வேளாண் துறை

கொரோனா காரணமாக கடந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் தற்போது மிகவும் குறைந்து விட்டது. மேலும், வருவாயை காட்டிலும் செலவு அதிகமாகி விட்டது. இதனால் வருமான வரி சலுகைகள் எதுவும் மத்திய அரசு வழங்க வாய்ப்பில்லை. அதேசமயம், 80சி, 80டி பிரிவில் பட்ஜெட்டில் சலுகை அறிவிக்கப்படலாம் என நடுத்தரவர்கத்தினர் மற்றும் மாத சம்பளதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், வருமானவரித்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில் “ 80சி பிரிவில் ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சம்வரை உயர்த்தப்படலாம், 80டி பிரிவில் மருத்துவக்காப்பீடு தொகையை ரூ25 ஆயிரத்துக்கும் அதிகரிக்கலாம் என பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், எங்களைப் பொருத்தவரை இந்த பட்ஜெட்டில், நடுத்தரவர்க்கத்தினருக்கும், மாத ஊதியம் வாங்கும் பிரிவினருக்கு எந்தவிதமான சலுகையும் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.