பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி; நீதிமன்றத்தை அணுகிய பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

 

பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி; நீதிமன்றத்தை அணுகிய பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்

ஜம்மு: பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக எழுந்த புகாரில், நீதிமன்றத்தை நாடியுள்ளார் தேர்தல் நடத்தும் அதிகாரி.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறமுனைப்புடன் கிறது. ஏற்கனவே ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வருகிற 12, 19 ஆகிய தேதிகளில் முறையே ஆறு மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ravinder raina

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், தேர்தல் தொடர்பான செய்திகளை தங்களுக்கு ஆதரவாக எழுத பாஜக-வினர் லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, பத்திரிகையாளர்கள் அனைவரும் கையெழுத்திட்டு புகார் கடித்தத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சித் தலைவருமான அவ்னி லவாசாவிடம் அளித்துள்ளனர்.

அதில், பாஜக சார்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் விக்ரம் ரந்தாவா ஆகியோர் தங்களுக்கு ஆதரவாக செய்திகளை எழுதுமாறு பணம் கொடுக்க முயற்சித்தனர். ஆனால், அதனை நாங்கள் ஏற்கவில்லை. அவர்கள் மீது  தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரிவில்வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அவ்னி லவாசா, இதுகுறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய போலீசார் மூலம் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால், தற்போது வரை நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதனிடையே, அடுத்த பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதல் மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை அவர்கள் தவறாக எடுத்துக் கொண்டனர் என ரவீந்தர் ரெய்னா விளக்கமளித்துள்ளார்.